துணை ஜனாதிபதியை சந்தித்த நடிகர் மம்முட்டி

டெல்லி,
கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான படம் ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நடிகர் மம்மூட்டி, கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘பசூகா’ வருகிற ஏப்ரல் 10 அன்று வெளியாகவுள்ளது.
தற்போது இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி, டெல்லியில் இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை சந்தித்தார். நடிகர் மம்மூட்டியுடன் அவரது மனைவி சுல்பத் மற்றும் சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். துணை ஜனாதிபதியுடன் அவரது மனைவி சுதீஷ் தன்கரும் உடன் இருந்தார்.
மோகன்லால் முன்னணி வேடத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மம்மூட்டி விரைவில் இணைய இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுகிறது.�