குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்…ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை கவுதமி

மாமல்லபுரம் ,
தமிழ் சினிமாவில் ‘குரு சிஷ்யன்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கவுதமி. தொடர்ந்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
சில காலம் நடிக்காமல் இருந்த கவுதமி, கடந்த 2015-ல் கமல் ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மாமல்லபுரம் அருகே நடந்த, ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகை கவுதமி கலந்துகொண்டார்.
அப்போது அவர் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், 2022-ம் ஆண்டை விட 96 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.