அல்லு அர்ஜுன் – அட்லீ படத்தின் இணையும் பிரபல பாலிவுட் நடிகை?|Janhvi Kapoor bags Allu Arjun – Atlee’s film?

சென்னை,
தமிழ் திரையுலகில் இருந்து இன்று பாலிவுட் திரையுலகம் வரை சென்றுள்ள முன்னணி இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் விஜய்யை வைத்து “தெறி, மெர்சல், பிகில்” ஆகிய ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானார்.
பின்னர் பாலிவுட்டில் கலமிறங்கிய அட்லீ, ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ படம் ரூ. 1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது அட்லீ, அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளநிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.