மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க நோ சொன்ன ரஜினிகாந்த்.. காரணம் என்ன?

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினியை தாண்டி இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
காரணம் என்ன?
அடுத்து ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, மாரி செல்வராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறி இருக்கிறார். ஆனால், சர்ச்சையில் சிக்கி ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் ரஜினிகாந்த் மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.






