டாக்டரை மணந்த 'புஷ்பா' நடிகர்

சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், நடிகை ரஷ்மிகா மந்தன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா: தி ரைஸ். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதில், பிரபல கன்னட நடிகர் டாலி தனஞ்சயா, ஜாலி ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் டாலி தனஞ்சயா, டாக்டராக இருக்கும் தன்யதா கவுரக்லர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.