ராம் சரணை இயக்கப்போகிறேனா? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ’கில்’ இயக்குனர்|Nikhil Nagesh Bhat denies reports of Ram Charan’s project

ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.
ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மறுபுறம், ராம் சரண் அடுத்ததாக புராணக்கதையில் நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தை ‘கில்’ பட இயக்குனர் நிகில் நாகேஷ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த தகவல் வதந்தி என்றும் ராம்சரணை வைத்து எந்த ஒரு புராணப் படத்தையும் இயக்கவில்லை என்றும் நிகில் நாகேஷ் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.