சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்

சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அமரன் வெற்றியை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் கைக்கோர்த்து உள்ளார்.

சிவகார்த்திகேயன் நாளை தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் ‘தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும்,குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன், தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய பெருங்கனவை நனவாக்கிய வெற்றி நாயகன், தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம் என் ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். அடுத்தடுத்து மக்கள் மகிழும் வெற்றிப்படைப்புகள் பல தந்து சாதனை புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!’ என பதிவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *