சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி….வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் தற்போது நயன்தாரா உடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்த படத்திற்கு ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. நகைச்சுவை, அதிரடி, கற்பனை கலந்த பொழுதுபோக்கு படமாக இது உருவாகிறது.
நிவின் பாலி சூப்பர் ஹீரோவாக நடிக்கும் இது இந்தியாவின் முதல் ‘மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.