பிறந்தநாளில் 25-வது படத்தை தொடங்கிய நடிகர் கிருஷ்ணா

பிறந்தநாளில் 25-வது படத்தை தொடங்கிய நடிகர் கிருஷ்ணா


தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. இவர் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தினர் மத்தியில் நம்பத்தகுந்த நடிகராக நீண்ட காலமாக வலம் வருகிறார். தொடர்ச்சியான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக திரைத்துறையினர் பாராட்டை பெற்றவராகவும் அறியப்படுகிறார்.

அந்த வரிசையில், நடிகர் கிருஷ்ணா தன் திரைப்பயணத்தில் 25-வது திரைப்படம் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த திரைப்படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையசம் கொண்டுள்ளது.
தற்போதைக்கு “KK 25” என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தை மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் மஹேந்திர ராஜ் சந்தோஷ் குமார் தயாரிக்கிறார்.

பிறந்தநாளில் 25-வது படத்தை தொடங்கிய நடிகர் கிருஷ்ணா | Krishna 25Th Film Commences In April

இந்தப் படத்தை இயக்குநர் பால கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திரைத்துறையில் களமிறங்குகின்றனர். முன்னதாக இயக்குநர் பால கிருஷ்ணன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’ திரைப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *