திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்


திருப்பதி,

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்தித்துள்ளார். இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன், விருமன், சர்தார்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, நடிகர் கார்த்தி, நலன் குமாராசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ‘சார்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் கார்த்தி தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழியில் தன்னை சந்திக்க வந்த மக்களுடன் நடிகர் கார்த்தி கைக்குலுக்கி, செல்பி எடுத்துக் கொண்டார்.

முன்னதாக மெய்யழகன் படத்தின் தெலுங்கு பதிப்பின் புரோமோஷன் நிகழ்ச்சியின்போது ‘லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம்’ என கார்த்தி கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *