நடிகர் தர்ஷனின் அடுத்த படம் – பர்ஸ்ட் லுக்குடன் வெளியான டைட்டில்|Actor Darshan’s next film

சென்னை,
நடிகர் தர்ஷன் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தும்பா படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
தற்போது இவர், புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்க பிளே ஸ்மித் நிறுவனமும் சவுத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக மலையாள நடிகை அர்ஷா பைஜு நடிக்கிறார். மேலும், காளி வெங்கட், வினோதினி, தீனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஹவுஸ் மேட்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.