‘பிரம்மானந்தம்’ பட டிரெய்லரை வெளியிட்ட பிரபாஸ்

சென்னை,
ஆர்.வி.எஸ். நிகில் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பிரம்மானந்தம்’.இதில் பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் மற்றும் அவரது மகன் ராஜா கவுதம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
மேலும், பிரியா வட்லாமணி, வெண்ணேலா கிஷோர், சம்பத், ராஜீவ் கனகலா, தணிகெல்ல பரணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனனர். இப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார்.