பிரபல மலையாள நடிகர் காலமானார்

திருவனந்தபுரம்,
பிரபல மலையாள நடிகர் அஜித் விஜயன் (வயது 57). இவர் பெங்களூரு டேஸ், ஒரு இண்டியன் பிரனாயகதா உள்பட பல்வேறு படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி தன்யா என்ற மனைவியும், காயத்ரி, கவுரி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், 57 வயதான அஜித் விஜயன் நேற்று உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஜித் விஜயன் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவு மலையால திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.